Header Ads

test

வீதி விபத்தால் சிதைந்து போன கலியாணக் கனவு.

கொழும்பு - கண்டி செல்லும் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தானைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ரசாஞ்சலி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வேளையில் எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தேவையின் நிமித்தம் வீதி ஓரத்தில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளிற்கு அருகில் நின்ற யுவதியே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.​​

அதிவேகமாக கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளின் அருகில் நின்றிருந்த யுவதி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய பேருந்து இராணுவத்தினரை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இளம் காதலர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், யுவதி துரதிஷ்டவசமாக உயிரிந்தமை பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.


No comments