காதல் விவகாரத்தால் மகளை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த தந்தை.
மொனராகலை பொலிஸ் பிரிவில் தனது இளம் வயது மகளை கத்தியால் வெட்டிக்கொலை செய்து விட்டு தந்தையொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர், தனது 17 வயது மகளையே இன்று பகல் வீட்டில் வைத்து வெட்டிக்கொலை செய்துள்ளார்.
மகளின் காதல் விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த அவர், இன்று மகளைக் கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையைப் புரிந்த குடும்பஸ்தர், வீட்டுக்கு அருகிலுள்ள காணிக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரிவந்துள்ளது.
இதன்போது விபரீத முடிவினால் உயிரிழந்த 49 வயதான குடும்பஸ்தர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும், அவர் முன்னாள் இராணுவச் சிப்பாய் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மகளின் காதலன் இராணுவத்தில் கடமையாற்றுவதாகவும் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment