வவுனியாவில் அகற்றப்பட்ட புத்தர் சிலை.
வவுனியா, செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவிற்கிட்பட்ட பழைய தொடருந்து நிலையம் முன்பாக உள்ள வீதியோரத்தில் நேற்று (09.04.2023)திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலைச் சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் குறித்த புத்தர் சிலையை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரால் குறித்த இடத்தில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
எனவே இந்த சம்பவத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலையும் அங்கிருந்து அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment