Header Ads

test

காதலனின் நண்பனால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி.

 17 வயதான சிறுமி ஒருவர், காதலனின் நண்பனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தன்னுடைய காதலனின் வீட்டுக்கு கடந்த 3ஆம் திகதி பாதிக்கப்பட்ட சிறுமி சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வந்த காதலனின் நண்பன், தனது நண்பன் தொடர்பில் விசாரித்தபோது , அவர் வெளியே சென்றுள்ளார் என சிறுமி கூற, புகைப்பொருளை பற்றவைப்பதற்காக நெருப்பை கேட்டுள்ளார்.

அந்த சிறுமியும் தீப்பெட்டியை எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்ற​போது, பின்னாலே சென்ற அந்தநபர், சிறுமியின் வாயை பொத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமி தன்னுடைய மாமியிடம் தெரிவித்த நிலையில், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேகநபர் இனங்காணப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.


No comments