எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்.
எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
குறைக்கப்பட்ட வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை சுமார் 1000 ரூபாவினால் குறைக்கப்பட்டு 3738 ரூபா புதிய விலையாக நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 402 ரூபாவால் குறைவடைந்து 1502 ரூபாவாக நடைமுறைக்கு வரவுள்ளது.
மேலும் 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 183 ரூபாவால் குறைவடைந்து 700 ரூபாவாக நடைமுறைக்கு வரவுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
Post a Comment