இளவயது மனைவியை மிகக் கொடூரமாக அடித்துக்கொன்ற கணவன்.
காலி மாவட்டத்தில் 23 வயதுடைய மனைவியை தடியால் அடித்துக் கணவன் கொலை செய்துள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் லம்புடுவ, மில்லங்கொட பகுதியை சேர்ந்த குமுதுனி தேஷானி ரணசிங்க எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸார் பார்த்த போது, குறித்த இளம் குடும்ப பெண் சமையல் அறையில் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
பின்னர் அரநாயக்க பொலிஸார் நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தடி இறந்த பெண்ணுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.
கொலையை செய்த சந்தேக நபரான கணவர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அரநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த கொலை சம்பவத்திற்கு குடும்ப தகராறே காரணம் என அரநாயக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Post a Comment