மாமியார் அடித்துக்கொலை - மருமகன் தலைமறைவு.
பொல்பித்திகம, அலுத்வேகெதர பிரதேசத்தில் பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பொல்பித்திகம, அலுத்வேகெதர பிரதேசத்தில் வசித்து வந்த 59 வயதுடைய பெண்ணே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கணவன் மற்றும் மருமகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குறித்த பெண் மருமகனால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பெண் இரத்தக்காயங்களுடன் மீட்கப்பட்டு பொல்பித்திகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெண்ணின் கணவரும் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில் சந்தேகநபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment