Header Ads

test

அரச ஊழியர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

அதன்படி புத்தாண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக கூறி, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா என ஜகத் குமார கேள்வி எழுப்பினார்.

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திய அரசாங்கம்! | The Government The Government Employees Happy

இதற்கு நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை பதிலளித்து உரையாற்றிய அவர், ஊழியர்களுக்கான மார்ச் 9 மற்றும் ஏப்ரல் 25 ஆம் திகதிகளுக்கான சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதன்போது அடிப்படை சம்பளம் 10 ஆம் திகதிக்குள் வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

No comments