Header Ads

test

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான தகவல்.

 நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, கல்விமாணிப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, தென் மற்றும் மேல்மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக கல்விமானிப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு | Happy Announcement Issued By Ministry Of Education

இதன்போது 2023 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் போதாமையினால், மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்காக கல்விமானிப் பட்டதாரிகளை இலங்கை ஆசிரிய சேவையில் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அனுமதி வழங்கப்படவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments