புதிய பயங்கரவாரத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்.
புதிய பயங்கரவாரத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக கிளிநொச்சியில் இன்றையதினம் (29.04.2023) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை புதிய பேருந்து நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை அரசினால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சட்டமாக்கப்பட்டு நிறைவேற்றப்படுமாக இருந்தால் அது ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக மாறிவிடும் எனத் தெரிவித்தே பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதேவேளை புதிய பயங்கரவாரத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக வாசகங்களை தாங்கியவாறும் பல்வேறு கோசங்ளை எழுப்பியதுடன் குறித்த சட்டமூலத்தின் மூலம் ஏற்படப்போகும் ஆபத்தை சித்தரிக்கும் விதமான குறியீட்டு வடிவமும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆர்ப்பாட்டத்தின் போது வடமாகாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் , சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
Post a Comment