பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு முன்னெடுக்கப்படும் பாரிய போராட்டம்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
சுருக்கு வலை உட்பட்ட சட்டவிரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று (03.04.2023) வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பிரதேச செயலக ஊழியர்கள் எவரும் கடமைக்கு உள்ளே செல்லமுடியாதவாறு பிரதேச செயலக வாயில்கள் மறிக்கப்பட்டு போராட்டகாரர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
கடற்தொழிலாளர்கள் வாழ விடு அல்லது சாகவிடு, கடற்தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் சுருக்கு வலையை உடனடியாக நிறுத்து, தடை செய்யப்பட்ட அனைத்து தொழிலையும் உடனடியாக நிறுத்து போன்ற கோசங்களை எழுப்பியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் இடம்பெறும் பகுதியில் பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment