மதுபோதையில் பேருந்து நடத்துனரைத் தாக்கிய இருவர் கைது.
நேற்று மாலை தலைநகரத்திலிருந்து மஸ்கெலியா நகருக்கு வந்து மீண்டும் இரவு தரித்து நிற்க நல்லதண்ணி நகருக்கு சென்று கொண்டிருந்த போது, மஸ்கெலியா நகரில் இருந்து புரவுன்லோ தோட்டத்திற்கு சென்ற மூன்று பேர் மது போதையில் பேருந்தில் ஏறியுள்ளனர்.
இந்நிலையில் நடத்துனர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட போது பயணிகளுக்கு பற்றுச் சீட்டு வழங்கும் இயந்திரம் உடைந்துள்ளது.
இதனால் பணம் காணாமல் போனதாக அவிசாவளை அரச பேருந்து சபைக்கு உரித்தான பேருந்து நடத்துனர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து 31 மற்றும் 32 வயது உடைய ஆர்.விக்னேஸ்வரன் , மற்றும் ஆர்.ஜெயபால் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டதாகவும் அவர்கள் இருவரும் எதிர் வரும் ஏப்ரல் 18 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் பனித்துள்ளார்.
Post a Comment