Header Ads

test

வவுனியாவில் பரிதாபகரமாக உயிரிழந்த இளைஞன்.

 வவுனியா - புளியங்குளம், புதூர் பகுதியில் வயல் காவலுக்குச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்றைய தினம் (15.04.2023 )  இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் இளைஞரைத் தேடிச்சென்ற போது வயல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத்  தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஜெகநாதன் கேஜிதன் என்பவராவார். 

மேலும், இளைஞனின் மரணம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  



No comments