கிளிநொச்சியில் எரித்து நாசமாக்கப்பட்ட வீடு.
கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத சில நபர்களால் வீடு ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (03.04.2023) இரவு இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வீட்டின் பிரதான வாயில் வாளினால் வெட்டப்பட்டுள்ளதாகவும் வீடு மற்றும் சொத்துக்கள் எரிந்து நாசமடைந்துள்ளதாவும் கூறப்படுகின்றது.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரின் வீடே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment