Header Ads

test

தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்.

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு மூன்றுமுறிப்பு பகுதியில் வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று (05.04.23) மீட்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் தெரிய வருவது,

மூன்றுமுறிப்புப் பகுதியில் மாடு மேய்ப்பதற்காகச் சென்றவர்களால் வயல் வெளி வீதி ஓரத்தில் குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நட்டாங்கண்டால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா முள்ளிக்குளம் பகுதியினைச் சேர்ந்த 70 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


No comments