Header Ads

test

யாழில் அடிதடியில் ஈடுபட்ட போதகர்.

யாழ்ப்பாணம் இருபாலை கானான் சிறுவர் இல்லத்தில் 80 வயது போதகரால் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக வெளியான தகவலால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த செய்தியை வெளியிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பல் ஒன்று தனியார் பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளது.

பாதிரியார் தலைமையிலான குழுவொன்று பேருந்தில்  வந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கிறிஸ்தவ மத போதகரின் தலைமையிலான கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த வயோதிப பெண் உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், போதகர், அவரது மகன் உள்ளிட்ட மூவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments