8 பேர் கொண்ட குழுவினரால் அடித்து நொருக்கப்பட்ட ஹோட்டல்.
அம்பாறை - இறக்காமம், வரிப்பதான்சேனையில் அமைந்துள்ள சலாமத் ஹோட்டல் மீது 8 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (03.04.2023) பதிவாகியுள்ளது.
நேற்றிரவு ஹிங்குரானை பகுதியைச் சேர்ந்த குழுவினராலேயே ஹோட்டலில் உள்ள விலை மதிப்புள்ள பொருட்கள் தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் இதைத் தடுத்து நிறுத்த முயன்ற ஹோட்டல் உரிமையாளரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரையும் குறித்த குழுவினர் தாக்கியுள்ளனர்.
ஹோட்டலின் உரிமையாளரும் தாக்குதல் நடத்திய குழுவைச் சேர்ந்த இரண்டு நபர்களும் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முரண்பாட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.எனவே இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment