யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேர் உயிர்கொல்லி போதைப்பொருளுடன் கைது.
யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடத்தில் கல்வி பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 17 பேர் உயிர்கொல்லி போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருளை விற்பனை செய்யும் நபரொருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக நேற்று (09.04.2023) மாணவர்கள் தங்கியிருந்த விடுதி சுற்றிவளைக்கப்பட்ட போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 17 மாணவர்களிடமிருந்து உயிர்கொல்லி போதைப்பொருள் மற்றும் போதைமாத்திரைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் விஞ்ஞானபீட பீடாதிபதிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
கைதான மாணவர்களுக்கு பரீட்சை நடைபெற்று வருவதாக பீடாதிபதி தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment