Header Ads

test

12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை.

  12 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை வளிமண்டலவியல் திணைக்களம்  விடுத்துள்ளது.

அதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! சாரதிகளுக்கு எச்சரிக்கை | Red Alert For 12 Districts

ஏனைய மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மலைப்பாங்கான பகுதிகளிலும் சரிவுகளிலும் உள்ள வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மின்னல், மண்சரிவு போன்றவற்றால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விழுந்த மரங்கள், பாறை சரிவுகள் மற்றும் மின் கம்பிகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புத்தளம், குருநாகல், கண்டி, கம்பஹா, கேகாலை, நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் ஆலோசனைகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், அவசர உதவிகளுக்காக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களை  திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments