Header Ads

test

யாழில் ஒரு கோடி ரூபையை ஏப்பமிட்ட அரச உயர் அதிகாரி.

 ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் யாழ் விற்பனை நிலையத்தின் பொறுப்பதிகாரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 மில்லியனுக்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்டதாக அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறுகையில்,

சந்தேக நபர் கூட்டுத்தாபனத்தின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் போது அரசாங்கத்திற்கு பெற வேண்டிய பணப் பத்திரங்களை மாற்றியமைத்து மோசடி செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, இந்த மோசடி தொடர்பான நீண்ட விசாரணையின் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அதேசமயம் சந்தேகநபரான அதிகாரியால் ரூ.10,329,480 மோசடி செய்யப்பட்டுள்ளதாக சிஐடி தெரிவித்துள்ளது.


No comments