Header Ads

test

யாழில் பதினொரு மாதக் குழந்தைக்கு தாய் மாமனால் நேர்ந்த துயரம்.

 யாழ்ப்பாணம் - இருபாலை பகுதியில் பிறந்து பதினொரு மாதங்களேயான குழந்தையை நாபரொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் மாமன் இன்று காலை கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவது,

 கோப்பாய் இருபாலை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த 11 மாதங்களான குழந்தை ஒன்றினை குறித்த குழந்தையின் தாயின் சகோதரர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படுகின்றது.

குறித்த குழந்தையின் பிறப்புறுப்பு பகுதியில் சிகப்பு அடையாளங்கள் காணப்பட்டன நிலையில், குறித்த குழந்தையின் தாயாரால் குழந்தை வைத்தியரிடம் அழைத்துச் செல்லப்பட்டபோது வைத்தியர்களால் உரிய பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அப்போது குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட குழந்தையின் தாயாரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது குழந்தையின் தாயின் சகோதரன் வந்து சென்றமை உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த நபர் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் நோயாளர் காவு வண்டியின் சாரதியாக கடமையாற்றி வருவதாக கூறப்படுகின்றது.

அதவேளை சந்தேக நபர் ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்பட்ட நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments