யானை தாக்கி இரு பிள்ளைகளின் தந்தை பலி.
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உடும்பன்குளம் பகுதியில் வயலில் காவல் காத்து வந்த விவசாயி ஒருவர் இன்று அதிகாலை யானை தாக்கி உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கவேலாயுதம்புரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சசிகரன் (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த நபர் வழமை போல் நேற்றிரவு வயல் காவலுக்காகச் சென்ற நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் யானை தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
Post a Comment