Header Ads

test

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.

     தொடர் ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் தங்கம் வாங்கும் சாமானியர்களுக்கு இது பெரும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.41,824 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவந்த நிலையில் , கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.

கடந்த வாரத்தில் அதிகபட்சமாக டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஒரு சவரன் தங்கம் ரூ.40,360-க்கும், டிசம்பர் 14 ஆம் திகதி ஒரு சவரன் ரூ.40,800 ஆக விற்பனை செய்யப்பட்டது.

பின்னர், திடீரென டிடிசம்பர் 31 ஆம் திகதி ஒரு சவரன் ரூ.41,040 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. பிறகு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், 2023 -ம் புத்தாண்டுக்கான வர்த்தகம் தொடங்கிய முதல் நாளில் இருந்து ஏற்றம் கண்டுவரும் நிலையில் (ஜன.5) இன்று சற்று குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,228 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.41,824 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.74.00 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.74,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 


No comments