Header Ads

test

வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் திடீர் மரணம்.

 வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிறையிலிருந்த கைதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

சம்பவத்தில் மாவில்வத்தை கண்டியைச் சேர்ந்த 62 வயதுடைய இ. சேகர் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் அதிக சளி காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு வருகின்றார்.


No comments