யாழ் கரையோரப்பகுதியில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்.
யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள தொண்டமனாறு கரையோரத்தில் இன்று காலை முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆற்றில் நீராடச் சென்ற வேளை நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment