பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் மின்வெட்டு இல்லை.
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் நாளாந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமது திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மின்சார சபை உள்ளிட்ட உரிய அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதேவேளை 2022ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள், எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment