ஓய்வூதியம் பெறச்சென்ற முதியவர் ஒருவரின் உயிரைப் பறித்த மோட்டார் சைக்கிள்.
யாழில் ஓய்வூதியம் பெறச்சென்ற முதியவர் ஒருவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் கோண்டாவில் வடக்கை சேர்ந்த ராமன் தர்மலிங்கம் (வயது 81) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கோண்டாவிலில் உள்ள தனது வீட்டில் இருந்து , திருநெல்வேலிப் பகுதியில் உள்ள மக்கள் வங்கி கிளையில் ஓய்வூதியப் பணத்தினை எடுக்கச் சென்ற வேளை, வங்கியின் முன்பாக பலாலி வீதியைக் கடக்க முற்பட்ட வேளை, வீதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் மோதி படுகாயமடைந்தார்.
இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment