யாழில் தலைக் கவசம் இன்றி பயணித்த நபரொருவருக்கு நேர்ந்த துயரம்.
யாழ் வடமராட்சியில் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையிலிருந்து பயணித்தவர், தவறி வீழ்ந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
புலோலி தெற்கைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ராசு புவனேஸ்வரன் (வயது - 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டிலிருந்து வேலைக்கு மோட்டார் சைக்கிளில் இன்னொருவருடன் பயணித்துள்ளார். இவர் தலைக்கவசம் அணியாது பின்னால் இருந்துள்ளார்.
மந்திகைச் சந்தியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்தபோது இவர் தவறி வீழ்ந்துள்ளார்.
இவர் படுகாயங்களுடன் மந்திகை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார். இந்தநிலையில், நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment