தந்தையையும் மகனையும் கடத்திய பெண் திடீர் மரணம்.
சிறுவனை கடத்திய குற்றச்சாட்டில் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட பெண் திடீரென உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பில் பத்து வயது சிறுவனையும் அவரது தந்தையும் கடத்தி கிராண்ட்பாஸ் பகுதியில் மறைத்து வைத்திருந்த நிலையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.
விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் நேற்று திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன் கெகுனாவல தெரிவித்துள்ளார்.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் பெண்கள் பிரிவில் வைக்கப்பட்டிருந்த போது சுகவீனமடைந்த சந்தேகநபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் சிறைச்சாலை நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் திகதி முதல் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டிருந்த சேதவத்தை வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 47 வயதுடைய சமிலா உதயங்கனி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
Post a Comment