கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் ஒருவர் படுகொலை.
இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதகம பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலில் 24 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார் உணவு தெரிவிக்கட்டுள்ளது.
கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில் சந்தேக நபர்கள் பலர் உள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பொலிஸ் பாதுகாப்பில் அந்த இடத்திலே வைக்கப்பட்டுள்ளதுடன் நீதவான் விசாரணை இன்று (12) நடைபெறவுள்ளது.
மேலும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment