அரச பேருந்து மீது வவுனியாவில் சரமாரியான கல் வீச்சுத் தாக்குதல்.
யாழில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் மீது கல் வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (10-01-2023) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை வவுனியா சாலைக்குச் சொந்தமான பேருந்து மீது, வவுனியா சாந்தசோலை சந்திக்கு அண்மித்து சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிலில் வந்த இருவர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் இ.போ.ச பேருந்தின் முன்பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டதுடன் பேருந்தின் கண்ணாடித் துண்டுகள் சாரதியின் உடம்பில் கீறிக் கிழித்து காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஸ்ஸில் பயணித்த பயணிகளுக்கு மாற்று பஸ் ஒழுங்கு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் குறித்த பேருந்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment