Header Ads

test

லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளிவந்த தகவல்.

 லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுவதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் புதிய விலை தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 201 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் சிலிண்டலின் புதிய விலை 4409 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1770 ரூபா என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மேலும் 2.3 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 38 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 



No comments