Header Ads

test

கொழும்பில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய்.

 கொழும்பு, பொரளை - சர்பன்டைன் வீதி அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவன் தனது 32 வயது மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொலைச் சம்பவம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறித்த பெண் மூன்று பிள்ளைகளின் தாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப தகராறு காரணமாக கொலை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதுடன், கொலையை செய்த கணவர் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடிக்கு வந்து கீழே குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதல் மாடியில் இருந்து குதிக்கும் முன் அவர் தனது கையை அறுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த கணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments