பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தந்தைக்கு நேர்ந்த துயரம்.
எம்பிலிபிட்டிய பனாமுர – ஓமல்பே பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓமல்பே பகுதியில் வசித்துவந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய ஒருவரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தமது பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீதியில் மறைந்திருந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Post a Comment