தினேஷ் சாப்டரின் மரணத்தில் தொடரும் மர்மங்கள்.
கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர், பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் வர்த்தகர் தினேஷ் சாப்டர் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், பிரபல தொழிலதிபரான தினேஷ் ஷாப்டரின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய இன்னும் விசாரணை நடந்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஷாப்டரின் மரணம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இதுவரை 175 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் குறைந்தபட்சம் 14 வழக்கு பொருட்கள் மற்றும் மாதிரிகள் பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விசாரணைகளுக்கமைய அவரது மரணம் உண்மையில் தற்கொலையல்ல என்றும் அவ்வாறு பரிந்துரைக்கும் எந்தவோர் அறிக்கையும் இல்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் அடையாளம் காணப்படாத நிலையில், அவரின் இரத்த மாதிரிகள் மற்றும் உடல் பாகங்களை டிஎன்ஏ பரிசோதனை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய,தொலைபேசி மற்றும் வங்கி பதிவுகள் உள்ளிட்ட தரவுகள் சேகரிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பேச்சாளர் கூறியுள்ளார்.
Post a Comment