Header Ads

test

நீர்கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கடத்தல் சம்பவம்.

 நீர்கொழும்பில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தி சிறு குழந்தையொன்று கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனை கடத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கடத்தப்பட்ட குழந்தையும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசாரணைகளின்போது குழந்தையைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்படி கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரன்த்திய உயன அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரண்திய உயன அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த பெண் ஒருவரே நீர்கொழும்பு பகுதியில் உள்ள நபரொருவருக்கு போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உரிய பணத்தை செலுத்தாததால் அவரது குழந்தை கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments