ஒரு தொகை தங்க நகைகளுடன் குடும்பஸ்த்தர் ஒருவர் கைது.
முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்றைய தினம் (10) தெரிவித்துள்ளனர்.
வவுனியா - திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த 3ஆம் திகதி வீடு புகுந்து சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரால் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் முல்லைத்தீவுப் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் திருடப்பட்டதாக கருத்தப்படும் காப்பு, சங்கிலி உள்ளிட்ட நகைகள் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment