மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.
நாட்டில் வீதி விபத்துக்கள் ஏற்படுவதைக் குறைக்கும் முயற்சியாக இலங்கை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவுக்கு புதிய உபகரணம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை துல்லியமாக அடையாளம் காணும் சாதனம் இந்த கருவியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டு வீதி விபத்துக்கள் பாரியளவில் அதிகரித்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இது போன்ற காரணிகளால் ஏற்படும் விபத்துகளின் அபாயத்தைக் குறைக்கும் வகையில் குறித்த புதிய சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,
Post a Comment