பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளான அரச பேருந்து - மூவர் படுகாயம்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டி பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் தெரியவருவது,
இந்த விபத்து மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஊறணி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பிரயாணத்தை மேற்கொண்ட பஸ்வண்டி இன்று (13) அதிகாலை 5.30 மணிக்கு மட்டு ஊறணி சந்திக்கு அருகில் வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியில் இருந்த பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Post a Comment