யாழில் வீதியில் இறங்கிப் போராட்டத்தை நடாத்திய மீனவர்கள்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் குருநகர் கடற்தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குருநகரில் இன்றைய தினம் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அங்கிருந்து பேரணியாகச் சென்று மகஜர்களை கையளித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கடற்தொழில் நீரியல் வளத் தினைக்களத்திலும், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமும் போராட்டக் காரர்கள் மகஜர்களை கையளித்தனர்.
Post a Comment