போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இராணுவ வீரர்.
ஸ்ரீ தலதா மாளிகையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்ட கண்டி பல்லேகெல கஜபா படைப்பிரிவின் இராணுவ வீரர் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கண்டி பொலிஸ் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் கண்டி குட்ஷெட் பேருந்து தரிடப்பிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஒரு பெக்கட் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவத்தில் 20 வருடங்களாக கடமையாற்றி வரும் இந்த சந்தேக நபர் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தவுலகல வேகிரிய ஓடியாதெனிய பிரதேசத்தை சேர்ந்த இந்த சந்தேக நபர், ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்த சட்டவிரோத செயல்கள் எதிலும் ஈடுபட்டாரா என்பதை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபரான இராணுவ வீரர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment