முட்டை விலையில் ஏற்றபட்ட பாரிய மாற்றம்.
எதிர்வரும் வாரத்தில் முதல் தொகுதி முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கடந்த திங்கட்கிழமை கூடிய அமைச்சரவை வர்த்தக அமைச்சருக்கு முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும் முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளமையினால் குறித்த தொழிலில் ஈடுபட்டுள்ள பெருமளவிலான மக்கள் பெரிதும் பாதிக்கப்படவுள்ளதாகவும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில் நேற்று சந்தையில் முட்டை ஒன்று 65 - 70 ரூபாவிற்கு இடையில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் முட்டையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு நுகர்வோர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment