Header Ads

test

போதைப்பொருள் வியாபாரத்தால் இடம்பெற்ற இரு கொலைகள் - இலங்கையில் இடம்பெற்ற திடுக்கிடும் சம்பவம்.

 போதைப் பொருளை பெற்றுக்கொண்டு பணத்தை வழங்காத சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து றம்புக்கனை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொன்று புதைக்கப்பட்ட இரண்டு இளைஞர்கள்-றம்புக்கனையில் சம்பவம் | Two Youths Who Were Killed And Buried

கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இளைஞர்கள் சம்பவம் நடந்த தோட்டத்திலேயே புகைப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக்கூறப்படும் இளைஞன் பிரதேசத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.

மாவனெல்லை பொலிஸ் பிரிவின் கிரிங்கதெனிய மற்றும் சாஃபியாவத்த ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக கடந்த நவம்பர் மாதம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவர்கள் கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் திகதி மற்றும் 25 ஆம் திகதிகளில் காணாமல் போயிருந்தனர்.

கொன்று புதைக்கப்பட்ட இரண்டு இளைஞர்கள்-றம்புக்கனையில் சம்பவம் | Two Youths Who Were Killed And Buried

காணாமல் போன இந்த இளைஞர்கள் றம்புக்கனை ஹூரிமலுவ பிரதேசத்தில் உள்ள போதைப் பொருள் விற்பனையாளர் ஒருவரின் வீட்டின் தோட்டத்தில் கொலை செய்து புதைக்கப்பட்டுள்ளதாக கேகாலை குற்ற விசாரணைப் பிரிவுக்கு இன்று  தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் கேகாலை நீதவானின் உத்தரவுக்கு அமைய, அவரது கண்காணிப்பின் கீழ் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் தோண்டப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments