Header Ads

test

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தில் ஏற்பட்ட குழப்பதிற்கு கிடைத்துள்ள தீர்வு.

 யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் கடமையாற்றுவார் என பொது நிர்வாக உள்நாட்டவர்கள் அமைச்சு யாழ்.மாவட்ட செயலகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்ததாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன் அமைச்சு ஒன்றின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் பதில் கடமையை மேலதிக அரசாங்க அதிபராக இருந்த பிரதீபன் கடமையை ஏற்றிருந்தார்.

அதேவேளை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தில் மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. எனினும் இதுவரை எவரும் நியமிக்கப்படாமல் தொடர்ந்தும் இழுபறி நிலமை காணப்படுகிறது.

இந்நிலையில் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய பிரதீபனை பதில் அரசாங்க அதிபராக நீடித்து பொதுநிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளதாக்க தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments