கிளிநொச்சிக் கடை ஒன்றில் நூதனமாக கொள்ளயடிக்கப்பட்ட பல லட்சம் ரூபாய்கள்.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியிலுள்ள தனியார் வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு 3,40,000 ரூபா பணம் திருடப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், வாழ்வாதாரத்திற்காக வழக்கப்பட்ட கோழி மற்றும் ஒரு ஆடும் நேற்று முன்தினம் (09.01.2023) திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மின்வெட்டு இடம்பெற்ற வேளை இரவு 9 மணியளவில் உரிமையாளர் அயலில் இடம்பெற்ற நிகழ்விற்குச் சென்றிருந்ததை அவதானித்தவர்கள், கடையை உடைத்து திருடியுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடை உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்த கடை உரிமையாளர் சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து கிளிநொச்சி தடையவியல் பொலிஸார் மற்றும் தருமபுரம் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment