Header Ads

test

சமூக விரோதிகளால் வனப்பகுதிக்கு வைத்த தீயால் காட்டு விலங்குகள் எரிந்து நாசம்.

 இலங்கையின் மத்திய மலைநாட்டில் கடந்த, சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் காலை வேளையில் அதிக அளவில் குளிரான காலநிலை தோன்றியுள்ளது.

இந்த காலத்தில் சமூக விரோதிகள் பற்றைகளுக்கு தீ வைக்க ஆரம்பித்து விட்டனர். நேற்றைய தினம் (11-01-2023) மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கிராப்பு தோட்ட பகுதியில் உள்ள மவுஸ்சாகலை நீர் தேக்க சுற்றியுள்ள பற்றைகளுக்கு தீ வைத்துள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் உள்ள வன ஜீவராசிகள் தீயில் அழிந்துள்ளன. குறிப்பாக, குருவிகள், மான் குட்டிகள், முயல், பன்றி போன்ற பல உயிரினங்கள் அழிந்துள்ளன.

இது தொடர்பில் வன பாதுகாப்பு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில்,

இவ்வாறு மாலை 6 மணிக்கு மேல் தீ வைப்பதால் தீயை அணைக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் காட்டு மிருகங்கள் பறவைகள் அழிவதுடன் தோட்ட குடியிருப்பு பகுதிக்குள் மிருகங்கள் நுழைய வாய்ப்பு உண்டு    எனவும் தெரிவித்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் வன பகுதிக்கு தீ வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் இவ்வாறு வன பகுதிக்கு தீ வைப்பவர்களை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



No comments