ஆயுதப் படையினருக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு.
இலங்கையில் ஆயுதம் தாங்கிய அனைத்து படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
அதன்படி தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களையும் அழைக்குமாறு ஜனாதிபதி விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த உத்தரவை இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment