Header Ads

test

யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்திற்கு 2023 ஜனவரி 3ம் திகதி முதல் புதிய நிர்வாக உறுப்பினர்கள் யாழ். கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கி.சந்திரசேகரனால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளன அலுவலகத்தில் நேற்று (04.01.2023) இடம்பெற்ற கூட்டத்திலே கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் தலைமையில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.

இதன்படி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவராக சிறிகந்தவேல் புனித பிரகாஸ் தெரிவாகியுள்ளார்.

மேலும் உபதலைவராக அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார், செயலாளராக யூலியன் சகாயராசா, பொருளாளராக தங்கவேல் தங்கரூபன், நிர்வாக உறுப்பினர்களாக குணரட்ணம் குணராஜன், செபமாலை அன்ரன் செபராசா, சரவணபவானந்தன் சிவகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


No comments