கொழும்பில் திடீரென களமிறங்கியுள்ள பொலிஸார்.
கொழும்பு - டெக்னிக்கல் சந்தியில் திடீரென ஏராளமான பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நீர்த்தாரை பிரயோக வண்டி மற்றும் பொலிஸ் வண்டிகள் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கையொன்று கொழும்பு டெக்னிக்கல் பகுதியை முற்றுகையிட்டு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்காரணமாகவே அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment