எரிந்து நாசமாகியுள்ள 7 மீன் பிடிப் படகுகள்.
கொழும்பு முகத்துவாரம் லெல்லம மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 சிறிய மீன்பிடிப் படகுகள் தீக்கிரையாகியுள்ளன.
இன்று (11) அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இரண்டு படகு இயந்திரங்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் முகத்துவாரம் பொலிஸாரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத அதேவேளை, இது ஒரு நாசகார செயலா என்பது குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment